tamilnadu

img

பட்டா கேட்டு சிபிஎம் பேரியக்கம்

நீடாமங்கலம், நவ.27-  நீடாமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் சோம.இராஜ மாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் கே.சீனிவாசன், மாவட்ட குழு உறுப்பி னர் கே. கைலாசம், நகர செயலாளர் சி.டி.ஜோசப் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டானர். நிறைவாக நீடா மங்கலம் வட்டாட்சியர் கண்ணனிடம் 500-க்கும் மேற்பட்ட மனு வழங்கப் பட்டது.

குடவாசல்

குடவாசல் வட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் குடவாசல் தெற்கு பகுதி ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி தலைமை தாங்கினார். கோரிக்கையை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் நா.பாலசுப்பிரமணியன் விளக்க உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா, கொரடாச்சேரி குடவா சல் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். குடவாசல் வட்டாட்சியரிடம் 200 க்கும் மேற்பட்ட மனு கொடுக்கபட்டது. 

குத்தாலம்

நாகை மாவட்டம், குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சி ஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலன் தலை மையில் போராட்டம் நடைபெற்றது. குத்தாலம் ஒன்றியச் செயலாளர் விஜய காந்த் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  

வலங்கைமான்

திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் என்.இராதா தலைமையில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.சேகர் கோரிக்கையை விளக்கி உரையாற்றினார்.  மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப்பிர மணியன், நகர செயலாளர் எஸ்.சாமி நாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட 150 பெண்கள் 100 ஆண்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்ட னர். நிறைவாக வட்டாட்சியரிடம் 300 க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுக்கப் பட்டன.

நன்னிலம்

நன்னிலம் ஒன்றியத்தில் நடை பெற்ற போராட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் டி.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை அமல்படுத்தக் கோரி மாநில குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி ஆகியோர் விளக்க உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் தியாகு. ரஜினிகாந்த், நகர செயலாளர் வி.நடரா ஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். நிறைவாக நன்னிலம் வட்டாட்சியரி டம் 250 க்கும் மேற்பட்ட மனு வழங்கப் பட்டது.