சென்னை:
எழுத்தாளர் பெ.சு.மணி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:
தமிழகத்தின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளரும், ஆய்வாளருமான பெ.சு.மணி அவர்கள் தனது 88 வது வயதில்தில்லியில் காலமானார். நீண்ட காலமாக சென்னையில் வசித்துவந்த அவர் தமிழக படைப்பாளிகள் பலருடனும் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தார். அண்மைக்காலமாக அவர் புதுதில்லியில் உள்ள அவரது மகள் வீட்டில் வசித்துவந்த நிலையில் உடல் நலக் குறைவால் காலமானார்.காரல் மார்க்ஸ் இதயம், இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார் உள்ளிட்ட முக்கிய நூல்களையும், வெ.சாமிநாத சர்மா, ம.பொ.சி., சுப்ரமணிய சிவாஉள்ளிட்ட பலரின் வாழ்க்கைவரலாற்றையும், விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் உள்ளிட்ட நூல் களையும் எழுதியுள்ளார். மத்திய அரசின் சாகித்ய அகாடமி பதிப்பகத்திலும் இவரதுபல நூல்கள் வெளிவந்துள்ளன.80-க்கும் மேற்பட்ட நூல்களையும், எண்ணற்ற கட்டுரைகளையும் எழுதியுள்ளபெ.சு.மணி அவர்களின் எழுத்துக்கள் பல்வேறுதுறைகளில் உள்ள ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பயனுள்ளவையாக உள்ளன.பெ.சு.மணி அவர்களது மறைவு தமிழக படைப்புலகத்திற்கு பேரிழப்பாகும். அவ ரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுவின் சார்பில்ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதோடு, அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.