சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 2000-க்கு மேல் இருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரதத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 67 ஆயிரத்து 4678 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 33 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 866 ஆக உயர்ந்துள்ளது. ஆறுதல் செய்தியாக ஒரு நாளில் 2 ஆயிரத்து 424 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 813 பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர்.
வழக்கம் போல இன்றைய கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,654 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 45 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது.