சென்னை
தமிழகத்தில் நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் தினசரி கொரோனா அறிகுறி மாதிரிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று (புதன்) 60,794 மாதிரிகள் கொரோனா அறிகுறியுடன் வந்துள்ளன. இதன்மூலம் அறிகுறிகளுடன் வந்த மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 25,36,660 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 58,818 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. நிலையில் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 24,42,482 ஆக உயர்ந்துள்ளது. பரிசோதனை முடிவில் 6,426 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மாநிலத்தில் மொத்தம் 119 கொரோனா பரிசோதனை (அரசு - 58, தனியார் - 61) கூடங்கள் உள்ளன.