tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

கட்டுமான தொழிலாளர் சங்க அண்ணாநகர் பகுதி மாநாடு

சென்னை, ஜூலை 29 - கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் அண்ணா நகர் பகுதி 2 வது மாநாடு ஞாயிறன்று (ஜூலை 27) குஜ்ஜி தெருவில் நடைபெற்றது. மாநாட்டிற்கு பகுதி துணைத்தலைவர் இ.பழனி தலைமை தாங்கினார். பகுதிக்குழு உறுப்பினர் ஜி.கார்த்தி கேயன் வரவேற்றார். பகுதிக்குழு உறுப்பினர் எம்.கணேஷ்குமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் சி.மார்டின் துவக்கவுரையாற்றினார். பகுதிச் செயலாளர் தி.குமரவேல் வேலை அறிக்கையும், பொரு ளாளர் இ.பழனி வரவு செலவு அறிக்கையும் சமர்பித்த னர். தையல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம். ஆனந்த் மற்றும் தோழமை சங்கத் தலைவர்கள் வாழ்த்தி பேசினர். மாவட்டத் தலைவர் எம்.உதயகுமார் நிறைவுரை யாற்றினார். பழனி நன்றி கூறினார். 13 பேர்கொண்ட பகுதிக் குழுவின் தலைவராக இ.பழனி, செயலாள ராக டி.குமரவேல், பொருளாளராக ஏ.செந்தில்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ராட்சத அலையில் சிக்கி வாலிபர் மாயம்

சென்னை, ஜூலை 29- ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மகாவீரபுரத்தை சேர்ந்த 50 பேர் ஞாயிறன்று மாமல்லபுரம் சுற்றுலா வந்த னர். மாலை 6 மணிக்கு கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி கோபி (23) உள்ளிட்ட 3 பேர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அருகில் இருந்த சில மீன வர்கள் விரைந்து செயல்பட்டு இருவரை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கோபி மட்டும் மாயமானார். மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் தேடியும் கோபியின் உடல் கிடைக்கவில்லை. ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் கோபியை தேடி வருகின்றனர்.