tamilnadu

பங்குபோடுவதில் மோதல்: ஊராட்சி செயலாளர் 3 பேர் பணியிடை நீக்கம்

சிதம்பரம், ஜன.21- கிராம ஊராட்சியில் செல வினத்திற்கு வழங்கப்பட்ட  காசோலையை  திருத்தி பணம் கையாடல் செய்த  ஊராட்சி செயலர்கள் பணி யிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியம், குமுடிமூலை மற்றும் சி. ஆலம்பாடியில் ஊராட்சி செயலாளர் சங்கர், மிரா ளூர் ஊராட்சி செயலர் பால கணபதி, பின்னலூர் ஊராட்சி செயலாளர் சசிக்குமார் ஆகியோர் ஊராட்சி வளர்ச்சிப்பணிகளுக்கான செலவினத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி கையொப்பமிட்டு காசோலை வழங்கினர்.  இதில் குமுடிமூலை ஊராட்சிக்கு ரூ.30 ஆயிரத்து 547 க்கான காசோலையை  ஊராட்சி செயலாளர் ரூ.1 லட்சத்து 90 ஆயிரமாக திருத்தியும்,  மிராளூர் ஊராட்சியில் 9 ஆயிரத்து 300 ரூபாய்க்கு வழங்கப்பட்ட காசோலையை ரூ.30 ஆயிரத்து 547 ஆக திருத்தி யும், பின்னலூர் ஊராட்சிக்கு ரூ.11 ஆயிரத்து 775  வழங் கிய காசோலையை ரூ.90 ஆயிரமாக திருத்தி,  மூவரும்  தனித்தனியே பணம் எடுத்துள்ளனர்.இது குறித்து மேல்புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி இந்திராதேவி விவசாரணை செய்ததில் முறைகேடு செய்தது தெரிய வந்தது.   இந்நிலையில் மூன்று ஊராட்சி செயலரையும் பணியிடை நீக்கம் செய்தது டன், இது குறித்து மருதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

ஊராட்சி செயலர்கள் முதல் முறையாக தவறு செய்துள்ளார்களா? அல்லது  தொடர்ந்து இது போன்ற  முறைகேடுகள் செய்துள் ளார்களா?  என தீவிரமாக விசாரணை நடத்தி வரு கிறார்கள். மேலும், இதில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகிறார்கள். இதுகுறித்து ஊராட்சி செயலர்கள் சிலரிடம் கேட்டபோது ,“இது ஒன்றும்  புதுசு அல்ல. திடீர் என்று ஒன்றிய அதிகாரிகள் கூட்டத்  திற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் பணம் வேண்டும் என்று கேட்பார்கள். அப் போது இல்லை என்றால் எங்கள் மீது தனிக் கவனம்  செலுத்தி சிறு தவறுகளுக் கெல்லாம் நடவடிக்கை எடுப்பார்கள். அதனால் அவர்  கள் கேட்கும்போது இருக்  கும் பணத்தை கொடுப்போம்.  பிரச்சனை என்று வரும்  போது எங்களை மாட்டிவிடு கிறார்கள்” என்கின்றனர். இந்த முறைகேடு தொடர்  பாக மாவட்ட நிர்வாகம் முறைப்படி விசாரணை செய்து சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற குற்றங் களை மூடி மறைக்கும் ஒன்றிய அதிகாரிகள் மீதும்  கடும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று கிராம  மக்கள் வலியுறுத்தியிருக்கி றார்கள்.