சென்னை, செப். 12 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது
“இடதுசாரி இயக்கத்தின் முது பெரும் தலைவரும், இந்திய அரசிய லில் மிக உயர்ந்த ஆளுமையுமான தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், துயரும் அடைந்தேன்.
தோழர் சீத்தாராம் யெச்சூரி அஞ்சா நெஞ்சினராக மிக இளம் வயதில் இருந்தே நியாயத்துக்காகப் போராடும் தலைவராக இருந்தார். மாணவத் தலை வராகத் துணிச்சலுடன் நெருக்கடி நிலையை அவர் எதிர்த்து நின்றதே இதற்குச் சான்றாகும்.
பாட்டாளி வர்க்கத்தின் நலன், மதச்சார்பின்மை, சமூகநீதி, சமத்து வம் மற்றும் முற்போக்குக் கருத்தியல் கள் மீது அவர் கொண்டிருந்த அர்ப் பணிப்பினால் வார்க்கப்பட்ட அவரது புகழ்வாய்ந்த அரசியல் வாழ்க்கை அடுத்து வரும் பல தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்.
அவருடனான கருத்தாழமிக்க கலந்துரையாடல்கள் என்றும் என் நெஞ்சுக்கு நெருக்கமானதாக நிலைத்து நிற்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தோழர் களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலை இக்கடினமான வேளை யில் தெரிவித்துக்கொள்கிறேன். செவ்வணக்கம் தோழர் யெச்சூரி!” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள் ளார்.
தோழர் சீத்தாராம் யெச்சூரியின் இறுதி ஊர்வலத்தில் திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர். பாலு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த வும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.