சென்னை:
8 மாதங்களுக்கு பிறகு இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப் பட்டுள்ளதால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட 8 மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் டிசம்பர் 7ஆம் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் கல்லூரிகள் திறக்கப் பட்டுள்ள நிலையில், கொரோனா நெறிமுறைகளுடன் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி, முகக்கவசம் அணிந்தபடியே 50 விழுக்காடு மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும். வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும். கல்லூரிகளில் நீச்சல் குளங்கள் போன் றவை மூடப்பட வேண்டும். மாணவர் விடுதியில் ஒரு அறையில் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும். முடிந்தவரை கல்லூரிக்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் மாணவர்கள் தங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மேலும், இறுதியாண்டு மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்கு அனுமதிக்கப்படுவர். கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.