மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு வாக்கு வங்கி அரசியலுக்கான பேசவில்லை, இது நீதிக்கான போராட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மொழி அடிப்படையில் மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
“இருமொழிக் கொள்கை, நியாயமான தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நியாயமான, வலுவான குரல் தேசிய அளவில் ஒலிப்பதால் பாஜக கலக்கமடைந்துள்ளது. அக்கட்சியின் தலைவர்கள் அளிக்கும் பேட்டியில் இருந்தே அது புலப்படுகிறது.
எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழித் திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.