சென்னை:
மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் சனிக்கிழமையன்று (ஏப்.17) காலை 4.35 மணிக்கு சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 59.
1961 ஆம் ஆண்டு சங்கரன் கோவில் அருகே உள்ள பெருங் கோட்டூர் கிராமத்தில் பிறந்தவர் விவேக் இவரது தந்தை அங்கப்பா பாண்டியன். தாய் மணியம்மாள். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம் காம் பட்டம் படித்த அவர் குரூப்-4 தேர்வு எழுதி இளம் உதவியாளராக சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றினார். முன்னதாக மதுரையில் தொலைபேசி ஆப்பரேட்டர் ஆக சிறிது காலம் பணிபுரிந்தார்.1987 ஆம் ஆண்டில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தின் மூலம்திரையுலகில் நடிகர் விவேக் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவையுடன் சேர்ந்து சமூகக் கருத்துக்களையும் தொடர்ந்து பேசிவந்தவர். அதனால் ‘சின்ன கலைவாணர்’ என்ற பெயரையும் அவர் பெற்றார்.இதுவரை 2000-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள் ளார். சிறந்த நகைச்சுவை நடிகருக்காக 5 முறை மாநில அரசின் விருதைப் பெற்றவர்.ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து நடித்து வந்தவர் நடிகர் விவேக்.முன்னாள் குடியரசுத் தலைவர்அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுகொண்டிருந்த அவர், மாணவர் களைத் திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு சமூகப்பணியாற்றி வந்தார்.
தமிழக அரசின் ‘பிளாஸ்டிக் இல்லா தமிழகம்’, கொரோனா பாதுகாப்பு’ போன்ற விழிப்புணர்வு குறும்படங்களிலும் ஆர்வமுடன் முன் வந்து நடித்தவர் விவேக்.சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக வெள்ளியன்று (ஏப்.16) காலை11 மணிக்கு சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவருக்கு 100 சதவீத அடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதில் முன்னேற் றம் இல்லாததால் எக்மோ சிகிச்சைஅளித்து வருவதாக மருத்துவமனைநிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட் டது.மேலும் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,”கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் விவேக்கிற்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தியது என்று கூறுவது உண்மையல்ல என்றும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வரும்பொழுது சுயநினைவை இழந்துவிட்டார் எனவும் விளக்கமளித்தார்.
விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் ஆனாலும் 24 மணி நேரத்திற்கு பிறகு தான்எதையும் தெரிவிக்க முடியும் என்றும்தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், சனிக்கிழமை அன்று காலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப் பட்டது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.விருகம்பாக்கம் இல்லத்திலிருந்து விவேக்கின் உடல் ஊர்வலமாக மேட்டுக்குப்பம் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள், திரைத்துறையினர், ரசிகர்கள், பிரபலங்கள் என திரளானோர் கலந்துகொண்டு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர்.மேட்டுக்குப்பம் மின்மயானத் தில் தமிழக காவல்துறையின் மரியாதையுடன் இறுதிச் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் விவேக்கின் உடல்எரியூட்டப்பட்டது.