சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி 6-வதுநாளாக நீதிமன்றம் வரவில்லை.அவருக்காக எந்த வழக்கும் விசாரணைக்கு ஒதுக்கப்படவில்லை.மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி தன் பதவியை கடந்த 6 ஆம் தேதி ராஜினாமா செய்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்டமாநிலம் முழுவதும் நீதிமன்ற பணியை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.கடந்த 9 ஆம் தேதி முதல்தலைமை நீதிபதி உயர்நீதிமன்றத்திற்கு வரவில்லை. அன்று அவர் விசாரிப்பதாக இருந்த வழக்குகளை மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி விசாரணை நடத்தினார். அதன் பின்னர் கடந்த வாரம் 5 நாட்களும் அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இந்த நிலையில், 6-வது நாளாக திங்களன்றும்(செப்.16) தலைமை நீதிபதி தஹில் ரமணிநீதிமன்றத்திற்கு வரவில்லை. அவருக்காக எந்த வழக்கும் விசாரணைக்கு ஒதுக்கப்படவில்லை.