tamilnadu

img

சென்னை: அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து - 2 பேர் கைது

சென்னை அரசு மருத்துவமனையின் மருத்துவர் பாலாஜியை, நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதனை கத்தியால் குத்திய விக்னேஷ் மற்றும் அவருக்கு உதவிய நபர் ஒருவர் என 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த தனது தாயாருக்கு சரியான சிகிச்சைவில்லை என குற்றத்தில் ஈடுபட்ட விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
மருத்துவருக்கு கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்திகுத்து காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவர்களின் கண்கானிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.