வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் வரும் 10 மற்றும் 11ல் அதிக கனமழை பெய்யும். புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழையும், சில நேரங்களில் அதி கனமழையும் பெய்யும். சூறாவளி காற்று வீசும் என்பதால் வங்கக்கடலுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.