சென்னை:
தமிழகத்தின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு கோதாவரி- காவேரி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இவ்வாறு கூறிய தமிழிசை, 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.
நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் அரசியல் கட்சிகளின் நீட் எதிர்ப்பு பிரச்சாரம் மாணவர்களால் முறியடிக்கப்படும் என்றும் பேசினார்.