சென்னை, மே 24- முகக்கவசம் அணியா மல் வாகனங்களில் வந்த 10 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் ஏ.கே விஷ்வநாதன் தெரி வித்தார். சென்னை புதுப்பேட்டை ராஜரத்தினம் விளையாட்டு மைதான நுழைவு வாயிலில், ஆயுதப்படை காவலர்கள் பயன் படுத்துவதற்காக அமைக்கப் பட்டுள்ள தானியங்கி கை கழுவும் இயந்திரத்தின் பயன்பாட்டை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் துவக்கி வைத்தார். அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய அவர், முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்க ளில் வருவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 500 ரூபாய் அபராதம் வசூலிக் கப்படும் என்ற அறிவிக்கப் பட்டது. அதன்படி தற்போது வரை 10 ஆயிரம் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. ஊர டங்கு காலத்தில் சென்னை யில் நடைபெறும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டிக்கு மேல் குறைந்துள்ளதாக என்றார்.