சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த முடிவினை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வரவேற்றுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். சுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஜூன் 15 முதல் பத்தாம் வகுப்பிற்கான அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும், காலாண்டு, அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்ய வேண்டுமெனவும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் அமைக்கப்பட்ட கல்வியாளர்கள் குழுவும், பல சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்தவிருந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்விணை ரத்து செய்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த முடிவினை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வரவேற்கிறது; பாராட்டுகிறது.தமிழக முதலமைச்சருக்கும் மற்றும் பள்ளி கல்வித் துறைக்கும் தமிழக அரசுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.