சென்னை, ஜூன் 19- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினரும், ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் ஸ்தாபகத் தலை வருமான ஜெ.மணி புதனன்று (ஜூன் 19) அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. அயன்புரத்தில் மார்க்சிஸ்ட்கம்யூ னிஸ்ட்கட்சி வளர்ச்சிப் பெரும் பங்காற்றியவர், சென்னை தொழிலாளர்க ளின் ஒப்பற்ற தலைவர் வி.பி.சிந்தனுடன் இயக்கப்பணி களை மேற்கொண்டவர். கடுஞ்சொல் பேசாது கனி வோடு மக்கள் சேவையில் ஈடுபாட்டால் பகுதி மக்களின் மனங்களை கவர்ந்தவராக இறுதி மூச்சுவரை வாழ்ந்தார். ஆட்டோ தொழிலாளர்களின் தலைவர் மறைந்த எஸ்.தங்கத்துடன் இணைந்து சென்னையில் ஆட்டோ தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதில் அயராது உழைத்தவர். ஆட்டோ சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒரு வரான மணிக்கு சசி என்ற மனைவியும், ஒருமகன், ஒரு மகள் உள்ளனர். அயன்புரம் அப்பாதுரை அப்பார்மென்டில் வைக்க ப்பட்ட அன்னாரது உடலுக்கு சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் சி.திரு வேட்டை, எம்.ராம கிருஷ்ணன், இரா.முரளி, மாவட்டக்குழு உறுப்பினர் செ.சுந்தரராஜ், பகுதிச்செய லாளர் எம்.ஆர்.மதியழகன், ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் அ.லொ.மனோகரன், ஜெயகோபால், என்.சி.தாமஸ் உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தி னர். அஞ்சலிக்கு பிறகு அவரின் உடல் கன்னியா குமரி மாவட்டம் மார்த்தாண்டம் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.