சென்னை:
பாலியல் புகாரில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை பாரிமுனையில் தடகள பயிற்சியாளராக இருந்த நாகராஜன் தன்னிடம் பயிற்சிக்கு வந்த மாணவிகளிடம் தவறாக நடந்துக்கொண்டுள்ளார். இதுகுறித்து புகார்கள் ஏராளமாக வந்தன. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு புதிய அரசும் காவல்துறையும் எடுத்த நடவடிக்கையால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் வழக்கில் கைது செய்யப் பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்தநிலையில் அவர் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப் பித்துள்ளார். பாலியல் வழக்கில் கைதான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரான ராஜகோபாலன் மீதும் ஏற்கனவே குண்டர் சட்டம் பாய்ந்து இருப்பது குறிப்பிடத் தக்கது.