tamilnadu

திருப்பெரும்புதூர் மருத்துவமனையில்

சென்னை, ஜூலை 19-  காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரில் அறிஞர் அண்ணா  பொதுமருத்துவமனை செயல்பட்டுவருகின்றது. இம்மருத்துவமனையில் திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட கிராம மக்கள் மற்றும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களில் படுகாயம் அடைபவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்பகுதி மக்கள் மேல் சிகிச்சைக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அல்லது சென்னைக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளது.   இந்நிலையில் திருப்பெரும்புதூர் அறிஞர் அண்ணா பொது மருத்துவமனையை விரிவு படுத்தி, மேம்படுத்த வேண்டும் என  வெள்ளியன்று (ஜூலை 19) நடைபெற்ற சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர் கே.பழனி  கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ‘53  படுக்கைகள் கொண்ட வட்டார மருத்துவமனையான அறிஞர் அண்ணா மருத்துவ மனையில் நாள் ஒன்றுக்கு 815 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனையின்  செயல்பாட்டின் அடிப்படையில்  போதுமான மருத்துவம் சாரா மற்றும் இதர பணியிடங்கள் நிரப்பப்பட்டு பணியாளர்கள் பணியில் உள்ளனர். மேலும் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அவசர சிகிச்சை மையம் கட்டப்பட உள்ளது’ என்றார்.