சென்னை, மார்ச் 19- பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தில் மணல் சேராமல் தடுப்பதற்காக 27 கோடி ரூபாய் செலவில் தடுப்புச் சுவர் கட்ட நடவ டிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரி வித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரக் கோரி, ஆண்டி குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர் உஷா என்ப வர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜ ரான வழக்கறிஞர் போத்திராஜ், பழவேற்காடு ஏரி முகத்துவராத்தில் தேங்கி இருந்த மணல் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிகமாக அகற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அப்பகுதியில் மணல் சேரா மல் தடுக்க 27 கோடி ரூபாய் செலவில் நிரந்தர தடுப்புச் சுவர் அமைப்பதற்கு விரி வான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மாநில கடலோர ஒழுங்கு முறை ஆணைய அனு மதியும், சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான அனுமதியும் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவ தற்கு அனுமதி கோரி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு விண்ணப் பித்திருப்பதாகவும் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், திட்டத் திற்காக பெறப்பட்ட அனுமதிகளையும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் நிலு வையில் உள்ள அனுமதி கோரிய விண் ணப்பத்தின் நிலை குறித்தும் 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.