திருவள்ளூர், ஏப். 12-கொத்தடிமைகளாக உள்ள இருளர் இன மக்களை மீட்டு வாக்களிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரியநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடுமலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தை விட்டு விலகி ஏரிக்கரை, குளக்கரை என ஒதுக்கு புறமாக வாழ்ந்து வருகின்றனர். எழுத்தறிவு இல்லாத மக்கள் செங்கல்சூளை, அரிசி ஆலைகள், மாந்தோப்புகளை காவல்காப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர்வெளி ஊர்களுக்கு சென்று விடுகின்றனர்.நாட்டு நடப்புகள்என்ன என்று புரியாமல் உள்ள பழங்குடியினர் மத்தியில்தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது.இதுகுறித்த பிரச்சாரம் நகர்ப்புறங்களில் மட்டும் செய்யும் தேர்தல் ஆணையம் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் செய்வதில்லை. இதனால் வாக்களிக்கும் ஜனநாயக கடைமையை அவர்கள் இழந்து விடுகின்றனர். தேர்தல் எப்போது நடக்கிறது என்பதை கூட தெரியாதவர்களாக அம்மக்களாக உள்ளனர். குறிப்பாக கடம்பத்தூர் அருகில் உள்ளஅரிகத்தூர், திருத்தணி பங்களாமேடு, தாடூர், எல்.என்.கண்டிகை,புளிக்குளம், வெங்கடாபுரம், கிளாம்பாக்கம்,காஞ்சிப்பாடி, பள்ளிப்பட்டு வட்டத்தில் காக்களூர், புண்ணியம், பூந்தமல்லி சென்னீர்குப்பம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இருளர்கள் பரவலாக வாசிக்கின்றனர்.சில இடங்களில் மொத்தமாக பணிபுரிகிறார்கள். இவர்களை உரிமையாளர்கள் ஓட்டுபோட அனுமதிப்பதில்லை. சில இடஙகளில் இருளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.இதனை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து, அனைத்து பழங்குடியின மக்களும் வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசன், பொருளாளர் எஸ். குமரவேல் ஆகியோர் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான மகேஸ்வரி ரவிக்குமார் மனு அளித்துள்ளனர்.