tamilnadu

img

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் 49 நாள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள்  49 நாள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சிதம்பரம், மே 27 -  அண்ணாமலை பல்கலைக்கழக வளா கத்தில் பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 49 நாட்களாக நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பயன்கள் மற்றும் பண பயன்கள், அரசு அலுவலங்களுக்கு பணி நிறைவுக்கு சென்ற மாற்றுத்திறனாளிகளை உடனடி யாக பல்கலைக்கழகத்திற்கு அழைக்க வேண்டும், விருப்பமுள்ள ஊழியர்களை அதே இடத்தில் பணி நிலைப்பு செய்ய வேண்டும், கருணை அடிப்படை பணி களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 49 நாட்களாக இரவு பகல் பாராமல் பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தலை மையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு சிபிஎம், சிபிஐ, வர்த்தகர் சங்கம், சிஐடியு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். சென்னை தலைமை செயலகத்தில் 48-வது நாள் போராட்ட நாளில் (மே 26) முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், செயலாளர் சமயமூர்த்தி, சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கருணை அடிப்படையில் பணிகள் உடனடியாக வழங்குவது, ஓய்வூதிய பலன்களை 3 மாதத்தில் படிப்படியாக வழங்குவது, பணி நிறைவுக்கு சென்ற மாற்றுத்திறனாளிகளை உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு அழைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதனை பல்கலைக்கழக வளாகத்தில் (49வது நாள் மே 27) போராட்டத்தில் செவ்வாய்கிழமை அனைவரும் வரவேற்றனர். அதை வரவேற்கும் வித மாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.