சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வகுப்புகள் ஆக.12ஆம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்கப்பட உள்ளது.அண்ணா பல்கலைக்கழக நடப்பு பருவத்தேர்வுக்கான வகுப்புகள், தேர்வுகள் நடத்துவதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில், “முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறாமலிருப்பதால் அவர்கள் தவிர பிற இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். அவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படஉள்ளது.
அந்த ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் தொடங்கப்படும். தற்போதைய பருவ வகுப்புகள் அக்டோபர் 26 ஆம் தேதியுடன் முடிக்கப்படும். செய்முறை வகுப்புகள் அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கப்படும். நவம்பர் 9ஆம் தேதி தேர்வுகள் முடிக்கப்படும்.டிசம்பர் 14ஆம் தேதி அடுத்தாண்டின் இறுதி பருவ வகுப்புகள் தொடங்கப்படும். ஆன்லைன் வகுப்புகள் அனைத்து சனிக்கிழமைகளிலும் எடுக்கப்படும். தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகளிலும் இந்த அட்டவணைப்படி வகுப்புகள், தேர்வுகள் நடைபெறும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் பருவத்தில் மாணவர்களுக்கு குறைக் கப்பட்ட பாடங்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.