tamilnadu

img

அதிமுக அரசின் ‘கடைசி’ இடைக்கால பட்ஜெட் தாக்கல்.... ரூ. 5.7 லட்சம் கோடி கடன் சுமையில் தமிழகம்....

சென்னை:
தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தெரி வித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான அரசின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. இன்னும் சில நாட்களில் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான தேதியும் அறிவிப்பும் வெளியாக உள்ளது. இத்தகைய பின்னணியில், தமிழகத்தின் இடைக்கால நிதி அறிக்கையை செவ்வாயன்று(பிப்.23)  சென்னை கலைவாணர் அரங்கில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

கடனில் தத்தளிப்பு
2021-22 ஆம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடி எனவும் இதனால் மூலதன செலவினம் 14.41சதவீதமாக உயர்ந்து ரூ.43,170.61 கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும்; இதன்மூலம் தமிழக அரசின் கடன்சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக அதிக மாகியுள்ளதையும் இடைக்கால நிதி நிலை அறிக்கை ஒப்புக்கொண்டுள்ளது.திமுக ஆட்சியில் இருந்த போது(2006-11) வாங்கிய கடன் 44ஆயிரத்து84 கோடி தான். ஆனால், சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறை ஒரே அரசு என்று தம்பட்டம்அடித்துக்கொள்ளும் அதிமுக ஆட்சியில் கடந்த பத்தாண்டு காலமாக ஆண்டுக்காண்டு கடன்சுமை அதிகரித்துக் கொண்டே வந்து தற்போது 3.55 லட்சம் கோடி உயர்ந்திருப்பதை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது நிதி நிலை அறிக்கை.கடந்த 2020-21 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கடன் தொகை ரூ.4,56,660 கோடியாகும்.  இதற்கு முந்தைய ஆண்டான 2019-20 ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக் குறை 55,058 கோடி ரூபாய் அதிகரித்தது. அற்கும் முன்பு 2018-19 ஆண்டில் தமிழகஅரசின் மொத்த கடன் ரூ. 3,55,845 கோடியாகும். அன்றைய வருவாய் பற்றாக்குறை ரூ. 17,491 கோடியாகவும் நிதி பற்றாக்குறை ரூ.44,481 கோடியாகவும் இருந்தது. 

நிலைமை இப்படி இருக்க வள ஆதாரங்களை கூட்டுதல் மற்றும் திறன்மிக்க வரிவசூல் நடவடிக்கைகள் மூலமாக மாநிலத்தின் மொத்த வருவாயை வலுவான நிலையில் பராமரிக்கஇயலும் என 11 வது முறையாக அறிக்கை தாக்கல் செய்த ‘பெருமைக்கு’ சொந்தமான நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது உரையின் போது கூறினார். மேலும், 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடுநிதி நிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டம் வந்த பிறகு, தமிழக வரலாற்றில் கடன் வாங்கி அந்த கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசு வெற்றி அதிமுக அரசுதான். ஆனால், நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின் வரையரை களின்படியே வருவாய் பற்றாக்குறை உள்ளது;

எனவே, வரும் காலங்களில்  மேலும் குறைக்க இயலும் என வழக்கமான பல்லவியையே  ஓ.பன்னீர்செல்வம் பாடினார்.நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் 1,33,350.30 கோடி ரூபாயாகவும், வருவாய் செலவுகள் 2,46,649.69 கோடி ரூபாயாகவும் இருக்கும் எனவும்இதன் மூலம் வரவுக்கும் செலவுக்கு மான பற்றாக்குறை 65,994.06 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் மதிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகஅரசின் கடன் சுமையை 5.7 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து அரசு ‘கஜானாவை’ ஒட்டுமொத்தமாக காலி செய்திருப்பது இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வெட்டவெளிச்ச மாகியுள்ளது.

சிபிஎம் விமர்சனம்.... 5- ஆம் பக்கம் பார்க்க ...