சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிட கோரிய நளினியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆளுனருக்கு சட்டப் பாதுகாப்பு இருந்தாலும் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்க முடியாது. அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காததால் ஏழு பேரும் சட்டவிரோத காவலில் இருப்பதாகவே கருதப்படும் என்று நளினி தரப்பில் தெரிவிக்கப் பட்டது.இந்த விசாரணையில், ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், அவருக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து வியாழனன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், நளினியின் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தனர்.