சென்னை,நவம்பர்.05- நடிகை கஸ்தூரியின் தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு திமுக எம்.பி ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி மிகவும் இழிவாக பேசியிருந்தார். இதற்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களிலி இருந்தும் எதிர்ப்பு எழும்பியதோடு கஸ்தூரி மீது பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக எம்.பி ஆ.ராசா கஸ்தூரியின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளார்.
மனிதராகப் பிறந்த அனைவரும் சமமானவர்களே' என்ற அறிவியல் உண்மைக்கு மாறாக தம்மை உயர் சாதியினராகக் காட்டிக் கொள்ளக் குறிப்பிட்ட வகுப்பினர் இப்போதும் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடுதான் இந்த ஆர்ப்பாட்டம். அது பாதுகாப்பு வலியுறுத்தல் ஆர்ப்பாட்டம் அல்ல. தன் சமூக பெருமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் என இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.