திருவண்ணாமலை, மே 25- திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 5,650 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிக்கப்பட்டுள்ளதாகவும், 180 மில்லி கொள்ளளவு கொண்ட 264 மதுபான பாட்டில் கள் மற்றும் 2,588 லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த மற்றும் கடத்திய 108 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாகவும், கடத்தலுக்கு பயன்படுத்திய 5 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தாகவும். மாவட்ட காவல்துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி உத்தர வின்பேரில், திருவண்ணாமலை மாவட்ட அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்கா ணிப்பாளர்கள் தலைமையில், காவல் துறை யினர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மது விலக்கு வேட்டை நடத்தியதில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5,650 லிட்டர் சாராய ஊறல், 2,588 லிட்டர் சாராயம்,180 எம்.எல். அளவு கொண்ட 264 மதுபான பாட்டில்கள் என மொத்தம் 8,292 லிட்டர் கைப்பற்றப் பட்டுள்ளது. மேலும் சாராய கடத்தலுக்கு பயன்படுத் தப்பட்ட 5 இருசக்கர வாகனங்களும் பறி முதல் செய்யப்பட்டு 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 108 குற்றவாளிகளை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த னர். மேலும் பொதுமுடக்கம் அமல்ப டுத்தப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை தொடர்ந்து மதுவிலக்கு வேட்டை நடத்தி யதில் 58,889 லிட்டர் சாராய ஊறல், 22,700 லிட்டர் சாராயம், 213 லிட்டர் கள், 4,597 பல்வேறு கொள்ளளவு கொண்ட மதுபாட்டில் கள் என மொத்தம் 83,229 லிட்டரும், சாரா யம் காய்ச்சுவதற்கு மூலப்பொருளான வெல்லம் 400 கிலோ, கடுக்காய் 1,410 கிலோவும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய 162 இரு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாக னம், 2 நான்கு சக்கர வாகனம், பறிமுதல் செய்யப்பட்டு 1,006 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 919 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.