tamilnadu

img

தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழப்பு கரூரில் மாதர் சங்கத்தின் உண்மையறியும் குழு ஆய்வு

தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழப்பு கரூரில் மாதர் சங்கத்தின் உண்மையறியும் குழு ஆய்வு

கரூர், அக்.7 -  அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் உண்மையறியும் குழுவினர்,  கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தி னரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரி வித்தனர். பின்னர் சம்பவம் குறித்து  அவர்களிடம் கேட்டறிந்து, வேலுச்சாமி புரத்தில் சம்பவ இடத்தையும் பார்வை யிட்டனர். கடந்த செப்.27 ஆம் தேதி விஜய்  பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட  கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததை யடுத்து, மகளிர் சட்ட உதவி மன்றம் மாநிலத் தலைவரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினருமான நிர்மலாராணி தலைமையில், குழுவினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மகளிர் சட்ட உதவி மன்றம்  மாநிலத் தலைவர் வழக்கறிஞர் உ.நிர்மலாராணி கூறுகையில், “கூட்ட நெரிசலில் சிக்கி உயிரி ழந்த 41 பேருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறோம். காயம் அடைந்தவர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  இவ்வளவு பெரிய கூட்டத்துக்கு ரோடு  ஷோ நடத்த அனுமதி அளித்திருக்கக் கூடாது. மதுரையில் நடத்தியதைப் போல், தனி இடத்தில் நிகழ்ச்சி நடத்தி இருக்கலாம். தவெக தொண்டர்கள் ஒழுங்கு, கட்டுப்பாடின்றி நடந்து கொண் டனர். இது போன்ற ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடுபவர்கள், மக்களை எப்படி வழிநடத்த முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், “அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தும் போது, பொதுமக்களின் பாது காப்புக்கான முழு பொறுப்பும் கட்சியின ரிடமே இருக்க வேண்டும். கட்சித் தலை வர்கள் தங்களைப் பாதுகாக்க பாதுகாவ லர்களை நியமிக்கிறார்கள்; அதேபோல் மக்களைப் பாதுகாக்கவும் ஏற்பாடு செய்திருக்கலாம். தற்போது நீதிமன்றம் தலையீட்டில் அமைக்கப்பட்ட, தனிநபர் ஆணையம் (அருணா ஜெகதீசன் குழு),  சிறப்பு புலனாய்வுக் குழு (அஸ்ரா கார்க்  தலைமையில்) ஆய்வு செய்து வருகிறது.  அதன் முடிவுகள் வரும் வரை காத்திருந்து, இனி இதுபோன்ற சம்ப வங்கள் நிகழாமல் தடுப்பு நடவடிக்கை களை எடுக்க வேண்டும்” என்று தெரி வித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாநகரச் செயலாளர் எம். தண்டபாணி, மாதர் சங்க மாநிலச் செய லாளர் எஸ். லட்சுமி, மாநில துணைத் தலைவர் எஸ். வாலண்டினா, தோழி கூட்டமைப்பின் மாநில துணைத் தலை வர் டி. நாகலட்சுமி, மதுரை உயர் நீதிமன்ற  வழக்கறிஞர் சகா, மாவட்டச் செயலாளர்  எஸ்.ரஞ்சிதா, வாலிபர் சங்கத் தலைவர் எம். சிவா, மாவட்டத் தலைவர் பி. சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.