சென்னை,ஜூன் 13- பக்ரீத் பண்டிகை வருகிற 17-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழ கம் முழுவதும் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனைகளை கட்டி வருகிறது. பக்ரீத்துக்காக சென்னைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ஆடுகள் வரையில் வர இருப்பதாக ஆட்டி றைச்சி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இறைச்சி வியாபாரி கள், தொழிலாளர்கள் நலச் சங்க நிர்வாகி கூறுகையில், பக்ரீத் பண்டிகைக்கு ஆந்திராவில் இருந்தே 90 விழுக்காடு ஆடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. சென்னையில் புளியந்தோப்பு, ரெட்டேரி, வியாசர்பாடி ஆகிய 4 இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரம் வரையில் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும்.
இந்த ஆண்டு உற்பத்தி குறைவால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை ஆடுகளின் விலை அதிகரித்துள்ளது. ரூ.50 கோடி வரையில் ஆடுகள் விற்பனையாக வாய்ப்பு உள்ளது என்றார். பக்ரீத் யொட்டி வருகிற 16-ந்தேதி ஆடு மற்றும் இறைச்சி வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.