tamilnadu

அரசு, தனியார் நிறுவனங்களில் 21,772 பேருக்கு வேலை புதுச்சேரி ஆளுநர் உரையில் தகவல்

அரசு, தனியார் நிறுவனங்களில் 21,772 பேருக்கு வேலை 
புதுச்சேரி ஆளுநர் உரையில் தகவல்'

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 21,772 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி 15 வது சட்டப்பேரவை யின் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்களன்று (மார்ச் 10) காலை 9.30 மணிக்கு துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் வரு மாறு:  புதுச்சேரியில் அரசு மற்றும் தனி யார் நிறுவனங்களில் 21,772 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.  வேலையில்லா திண்டாட்டம் 6.7 விழுக்காட்டிலிருந்து 4.3 விழுக்காடாக குறைந்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு குழந்தைகள், இளைஞர்கள், முதிய வர்கள் என அனைவருக்கும் அனைத்து சமூக திட்டமும் புதுவை அரசால் குறுகிய காலத்தில் நிறை வேற்றப்பட்டு வருகிறது.  புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறுகிய காலத்தில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கம்,ரயில் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ. 1000 கோடிக்கு ஒப்புதல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த போக்கு வரத்து முனையம் விரைவில் திறக்கப்படும். புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு நான்கு வழி சாலை மற்றும் இந்திரா காந்தி சிலை யிலிருந்து ராஜீவ் காந்தி சிலை வரை மேம்பாலம் அமைக்க ஒன்றிய அரசு ஆயிரம் கோடி நிதி வழங்க ஒப்புதல் அளித்திருக்கிறது. இவ்வாறு ஆளுநர் தெரிவித்தார். 55 நிமிடங்கள் உரை முன்னதாக சட்டப்பேரவைக்கு வந்த துணை நிலை ஆளுநர் கே.கைலாஷ் நாதனுக்கு மலர்கொத்து கொடுத்து சட்டப்பேரவைத் தலைவர் வரவேற்றார். 55 நிமிடங்கள் உரை யாற்றினார். அதைத் தொடர்ந்து, துணை நிலை ஆளுநரை பேரவைத் தலைவர் செல்வம் வழி அனுப்பி வைத்தார்.  இதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. பிறகு, கூட்டத்தை ஒத்தி வைத்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் ரங்க சாமி, எதிர்கட்சித் தலைவர் சிவா, அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பி னர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.  ரூ.8.6 கோடி செலவு ரூ 8.6 கோடி ரூபாய் செலவில் காகிதமில்லா சட்டபேரவையாக புதுச்சேரி சட்டப்பேரவை மாற்றப்பட்டுள்ளது. வழக்கமாக துணைநிலை ஆளுநர் உரையின் புத்தகம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் பேச துவங்கியதும் உறுப்பி னர்களின் மேசை மீது இருந்த  கை அடக்க கணினி தட்டி தட்டி பார்த்த னர். அதில் சட்டமன்ற நிகழ்வு பட்டியல் மட்டுமே இருந்தது.20 நிமிடங்கள் கழித்து கணினியில் ஆளுநர் உரை வந்தது. அதே நேரத்தில் அனைவருக்கும் பழைய முறைப்படி ஆளுநர் உரை புத்தகம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் குற்றச்சாட்டு  ஒன்றிய அரசு திட்டமிட்டு புதுச்சேரியில் இந்தியை திணிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. மேலும் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையும் குறைக்க உள்ளது. அதை மறுக்கும் வகையில் துணை நிலை ஆளுநர் உரையில் எந்த தகவலும் இல்லாதது.  மின்சார வரி உள்ளிட்ட வரி உயர்வுகளை அறிவித்து மக்களை வாட்டி வதைக்கும் அரசாகவே  என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக அரசு உள்ளது என்று  காங்கிரஸ் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் வைத்தியநாதன் ஆளுநர் உரை குறித்து குற்றஞ்சாட்டினார்.