சென்னை, செப். 11 - உலகின் 16 முன்னணி நிறு வனங்களுடன், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், ரூ. 7016 கோடி முதலீட்டிற்கான புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள ப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பய ணத்தின் போது, முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ வில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ. 7016 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.