tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மங்களபுரத்தில்  10 மணல் லாரிகள் பறிமுதல்

அம்பத்தூர், மே 17- அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே பூர்வீக கிராமம் மங்களபுரம் உள்ளது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியில் கருமா குளம் சீரமைக்கும் பணி கடந்த பிப்ரவரியில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் அப்பகுதியில் இருந்து லாரிகள் மூலம் மணல் வெளியே கொண்டு செல்லப்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட லாரிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடுப்பு சுவரில் மோதிய  கார் தீப்பற்றி எரிந்து நாசம்

அம்பத்தூர், மே 17- பூந்தமல்லி அடுத்த பாப்பான் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத். இவர் வழக்கம் போல் சனிக்கிழமை காலை வேலைக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பாப்பான்சத்திரம் பகுதியில் காரை திருப்பும் போது பெங்களூர் நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி லேசாக காரின் பின் பகுதியில் உரசியதாகக் கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு சுவரின் மீது மோதியதில் காரின் முன் பக்கம் நொறுங்கி அப்படியே தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஓடி சென்று காருக்குள் சிக்கிக் கொண்ட பிரசாத்தை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பிரசாத்தை காரில் இருந்து மீட்ட சிறிது நேரத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கார் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

ஜெய்ஸ் புகைப்பட தொழில்நுட்பத்தை கொண்டுள்ள புதிய செல்போன் '

சென்னை, மே 17-  திருமணங்களை அழகாக புகைப்படம் எடுக்கும் வகையில் ஜெய்ஸ் புகைப்பட தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள விவோ வி 50 எலைட்  ஸ்மார்ட்போனைவிவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது ரோஸ் ரெட் வண்ணத்தில் 12 ஜிபி + 512 ஜிபி மெமரி கார்டுடன் கிடைக்கிறது. அத்துடன் பயனர்களுக்கு சிறந்த இசை அனுபவத்தை வழங்கும் விதமாக டிடபிள்யூஎஸ் இயர்போனுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மிகப்பெரிய 6,000 எம்ஏஎச்பேட்டரியைக் கொண்ட இது, கேமரா, வடிவமைப்பு மற்றும் செயல்திறனில் வி50 மாடலின் தனித்துவமான அம்சங்களையும் கொண்டுள்ளது. சென்னை பாடி மேம்பாலம் அருகே  சாலை விபத்து- தாய், குழந்தை பலி சென்னை,மே  17- சென்னை பாடி மேம்பாலம் அருகே லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த கணவன் சரவணன், மனைவி பிரியா மற்றும் ஒரு வயது குழந்தை கீழே விழுந்தனர். இதில், பிரியா மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பிரியா  உயிரிழந்தார். மேலும், விபத்தில் படுகாயமடைந்த ஒன்றரை வயது குழந்தை கரோலின் பலியான நிலையில், தந்தை சரவணன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். செயலி மூலம் 12,889 புகார்களுக்கு  உடனடி தீர்வு: தாம்பரம் மாநகராட்சி  தாம்பரம், மே 17-  வாய்ஸ் ஆப் தாம்பரம் என்ற செயலி மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி, அதன் மீது துறை சார்ந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. புகார்கள் மீதான் நடவடிக்கைகளை கண்காணித்தல், நிவர்த்தி செய்யப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இதன் மூலம்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தாம்பரம் மாநகராட்சியின் மண்டலங்கள் 1 முதல் 5 வரையில் வாய்ஸ் ஆப் தாம்பரம் என்ற செயலியின் மூலம் பொறியியல், சுகாதாரம், வருவாய், நகரமைப்பு ஆகிய பிரிவுகள் மற்றும் இதர சேவைகள் தொடர்பாகவும் இதுநாள்வரை 13,869 புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, 12,889 புகார்களுக்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 93 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள புகார்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எஸ்ஜெனரேஷன்  4  தொழில்நுட்பத்தில்புதிய ஸ்மார்ட்போன் சென்னை, மே 17-  உயர் செயல் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்பிராண்டாக திகழும் ஐக்யூஓஓ வரும் 26-ந்தேதி இந்தியாவில் அதன் புதிய நியோ 10 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட்போன் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த உள்ளது. ஸ்மார்ட்போனில் பல பணிகளைச் செய்யும் இளம் தொழில் வல்லுநர்கள் மற்றும் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவின் வேகமான ஸ்மார்ட்போனான இதில் இடம் பெற்றுள்ள ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜெனரஷேன் 4 செயலியானது முதன்மை தரவேகத்தையும் செயல் திறனையும் பயனர்களுக்கு வழங்குகிறது.