tamilnadu

img

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க 10 கடமைகள்: பா.சிதம்பரம் யோசனை

சென்னை, மார்ச் 26- நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்  பட்டுள்ளது. ஏழை-எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய 10 கடமைகள் குறித்து முன்னாள் மத்திய  நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் யோசனை தெரிவித்துள்ளார். பிரதமர் கிசான் திட்டத்தில் தரும் உதவித்தொகையை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி  உடனே வழங்க வேண்டும்.குத்தகை விவசாயி களின் பட்டியல்களை மாநில அரசுகளிடம் இருந்து பெற்று ஒவ்வொரு குத்தகை விவசாயி யின் குடும்பத்திற்கும் ரூ.12 ஆயிரம் உடனே வழங்க வேண்டும். மகாத்மா காந்தி வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.3,000 உடனே  வழங்க வேண்டும். ஜன்தன் திட்டம் அதனை ஒத்த முந்தைய திட்டங்களில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகள் (நகர்ப்புற வங்கி கிளைகளில் மட்டும்) ஒவ்வொன்றுக்கும் ரூ.3,000 உடனே வழங்க வேண்டும். ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்க வேண்டும். ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள  தொழில் உரிமையாளர் அனைவரும் தற்போ துள்ள வேலைகளையோ, ஊதியத்தையோ குறைக்கக்கூடாது என்று கட்டளையிட்டு அவர்கள்  தருகின்ற ஊதியத்தை அரசு 30 நாட்களுக்குள் ஈடு செய்ய வேண்டும். மேற்கூறிய இனங்களில் அடங்காதவர்க ளுக்கு, ஒவ்வொரு வார்டிலும், ஒன்றியத்திலும் பதிவு அலுவலகம் திறந்து அத்தகைய ஏழை களை பதிவு செய்து ஒவ்வொருவருக்கும் வங்கி  கணக்கு திறந்து அந்த கணக்கில் ரூ.3,000 உடனே வழங்கவேண்டும். எல்லா வகையான வரிகளையும் கட்டுவ தற்கு இறுதி நாளை ஜூன் 30-ந்தேதிக்கு ஒத்தி  வைக்கவேண்டும். வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மாத தவணை இறுதி நாட்களை ஜூன் 30-ந்தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும். மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படும் பொருட்கள், சேவைகள் மீது உள்ள ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை 5 சதவீதம் உடன் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.