செங்கல்பட்டு, டிச.29- செங்கல்பட்டு நகராட்சி யில் கால்நடைகள் சாலை யோரங்களில் சுற்றித் திரிவ தால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிறுத்தத்தில் மார்க்கெட் இருப்பதால், வியாபாரிகள் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டு கின்றனர். இதனை உண்ப தற்காக கால்நடைகள் அங்கே வருகின்றன. மேலும் அங்கேயே சுற்றித்திரி கின்றன. செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகிலேயே நகர காவல் நிலையம், நகராட்சி அலுவலகம் உள்ளது. இதனால் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். கால்நடை கள் சாலையில் குறுக்கும் நெடுக்கமாக சுற்றித்திரிவ தால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கால்நடை வளர்ப்போரி டையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதை யும் மீறி கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரிய விடுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். அப்போதுதான் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதைக் கட்டுப்படுத்த முடியும் என பொது மக்களும் வாகன ஓட்டிகளும் தெரிவிக்கின்ற னர்.