செங்கல்பட்டு,மார்ச் 23- அரசு அலுவலர்களைப் பொதுமக்கள் சந்திப்பதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை யாகச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்க ளில் மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் நடத் தப்படும் மக்கள் குறை தீர் கூட்டம், விவசாயி கள் குறைதீர் கூட்டம், திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் மனு நீதிநாள் கூட்டம், எரிவாயு குறைதீர் கூட்டம், அஞ்சலக குறை தீர் கூட்டம் உள்ளிட்ட அனைத்து வகை கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் திங்களன்று நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்ட தகவல் அறியாதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தனர். இவ்வாறு மனு கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றம் அடையா மல் இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு பெட்டி ஒன்றை வைத்துள்ளனர். மனு கொடுக்க வந்தவர்கள் மனுவினை அந்த பெட்டியில் போடும் படி அறிவுறுத்தப்பட்டனர். இதே போன்று செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திலும் மனுப் பெட்டி வைக்கப் பட்டுள்ளது.