செங்கல்பட்டு, செப். 16 படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.9கோடி பணத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட படாளத்தில் கூட்டுறவுக்குச் சொந்த மான சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலைக்கு காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுகுன்றம், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட்டங்க ளைச் சார்ந்த கரும்பு விவசாயிக ளும் தேவைக்கேற்ப பாண்டிச்சேரியி லிருந்தும் கரும்பு அறவைக்கு வழங்கி வருகின்றனர். 2018-19 ஆம் ஆண்டில் சர்க்கரை ஆலையில் 1.80 லட்சம் டன் கரும்பு அறவை நடந்துள்ளது. கரும்பு வெட்டப்பட்ட 15 நாட்களுக்குள் விவசாயிக ளுக்குக் கரும்புக்கான பணத்தை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும், ஆனால் இன்று வரை விவசாயி களுக்குப் பணம் வழங்கவில்லை. அரசு நிர்ணயித்த விலை டன்ஒன்றுக்கு ரூபாய் 2612, ஊக்க விலை 200 இந்த தொகையானது விவசாயிகளுக்குக் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதிக்குப்பின்னர் வழங்கப்படவில்லை. இவ்வாறு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகை ரூபாய் 9கோடி எனக் கூறப்படுகின்றது. கரும்பு வெட்டிய 15 நாட்களுக்குள் பணம் வழங்கி யிருக்க வேண்டும், கடந்த 7 மாதங்க ளாக இந்த பணம் விவசாயிகளுக்கு வழங்காததால் விவசாயிகள் கூட்டு றவு வங்கியில் விவசாயம் செய்வ தற்காக வாங்கிய கடனை கட்டமுடி யாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வங்கியிலிருந்து விவசாயிகளுக்குக் கடன் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடன் வாங்கிய விவசாயிகளின் பணம் சர்க்கரை ஆலையில் உள்ள நிலையில் கடனுக்கான வட்டித் தொகையை சர்க்கரை ஆலை நிர்வாகமே கட்ட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.. இந்நிலையில் படாளம் சர்க்கரை ஆலையில் 2 லட்சம் சர்க்கரை மூட்டைகள் இருப்பில் வைக்கப்பட்டு ள்ளது. இந்த சர்க்கரை மூட்டை களை உடனடியாக விற்பனை செய்து விவசாயிகளின் பாக்கித் தொகையை உடனடியாக வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர், சர்க்கரைத் துறை ஆணையர் உள்ளிட்டவர்களுக்கு பலமுறை மனு கொடுத்து முறையிட்டும் நடவடிக்கை இல்லை. கடந்த மாதம் தலைமைச் செயலகம் முன்பு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடத்திய போது அமைச்சர் மற்றும் சர்க்கரை துறை ஆணையர், இயக்குநர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை யில் உடனடியாக பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தும் இன்று வரை அதற்கான நடவடிக்கை இல்லை இதன் விளைவு விவசாயிகள் கூட்டு றவு வங்கி, தனியார் வங்கி, உள்ளிட்ட வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடன், நகைக்கடன். உள்ளிட்ட கடன்களைக் கட்ட முடியாமல் பாதிக்கப்பட்டிருப்பதுடன், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேருவிடம் கேட்ட போது அரசு அறிவித்த கரும்பு பணத்தை உடனடியாக வழங்கிட வேண்டும், சர்க்கரை ஆணையர் படாளம் சர்க்கரை ஆலையில் இருப்பில் உள்ள 2 லட்சம் மூட்டை சர்க்கரை விற்பனை செய்து விவசாயி களின் பாக்கியை வழங்கிட வேண்டும், இதே போன்று கரும்பு ஊக்கத் தொகை 200 ரூபாய் 1.80 லட்சம் டன்னுக்கு சுமார் 3.60 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நிர்வாகம் பாக்கி வைத்துள்ளது. இதுமட்டு மின்றி 2017-18ஆம் ஆண்டிற்கான எஸ்ஏபி அதாவது கூடுதல் விலை 450 வீதம் சுமார் 15 கோடி ரூபாய் வரை ஆலை நிர்வாகம் பாக்கி வைத்துள்ளது. இந்த பணத்தையும் நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்கா மல் விவசாயிகளை ஏமாற்றி வருகின்றது. ஆலையில் உள்ள மெலாசஸ், பக்காஸ் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து பாக்கித் தொகையை வழங்கிட மாவட்ட நிர்வாகம் ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதேபோன்று கரும்பு விவ சாயிகளைத் தொடர்ந்து அரசு வஞ்சித்துவருவதால் பலர் விவசாயம் செய்வதையே நிறுத்தி வருகின்றனர். இதனால் கரும்பு விவசாயம் குறைந்து வருகின்றது. விவசாயிகளைப் பாதுகாக்கவும், ஆலையை லாபத்துடன் இயக்கிட வும், ஆலையில் மின்சார உற்பத்தி செய்திட மின் ஆலையை அமைக்க வேண்டும், மேலும் கரும்பு விவ சாயத்தை பாதுகாத்திட இந்தாண்டு விதை கரும்பை முழு மானியத்துட னும், உரம் பூச்சி மருந்துகளை மானியத்துடனும் வழங்கிட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றார்.