புதுதில்லி:
ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாயை நோக்கி செல்லும் நிலையில், அதனை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்நிலையில், வெங்காய விலை உயர்வு விஷயத்தில், தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கைவிரித்துள்ளார்.வெங்காய விலை உயர்வு குறித்து,மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், செய்தியாளர்களுக்குப் பேட்டிஅளித்துள்ளார். அப்போது, “நிலைமைகுறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்;அரசாங்கம் அதனால் முடிந்த அளவிற்கு சிறந்த முயற்சியை மேற்கொள்கிறது; நாங்கள் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்; 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளோம், மூலமற்றும் பதப்படுத்தப்பட்ட வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள் ளோம்” என்று பல்வேறு விஷயங்களை அடுக்கியுள்ளார்.அவற்றைப் பொறுமையாக கேட்டுக்கொண்ட செய்தியாளர்கள், ‘சரி நீங்கள்எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் இருக்கட் டும்.. வெங்காயத்தின் விலை எப்போது குறையும் என்று சொல்லுங்கள்?’ என மடக்கியுள்ளனர். இதனை எதிர்பாராத ராம்விலாஸ் பஸ்வான், ஒரே வரியில் “அது எங்கள் கைகளில் இல்லை” என்று கூறிதப்பித்துள்ளார்.