tamilnadu

img

இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சி

மும்பை 
கச்சா எண்ணெய் விலை, இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் கொரோனா வைரஸ் தாக்குதல் போன்றவற்றின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் கடந்த ஒருவாரமாக மந்த நிலையிலேயே பயணித்து வந்த நிலையில், நடப்பு வாரத்தின் தொடக்க நாளான திங்களன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 36,950.20 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கிய நிலையில் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. 

மதியம் 1 மணியளவில் சென்செக்ஸ் 2300 புள்ளிகள் சரிந்து 35,256இல் வர்த்தகமானது. அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 574 புள்ளிகள் சரிந்து 10,415இல் வர்த்தகம் ஆனது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தைகள் மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை, இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சரிவை சந்தித்துள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சரிவில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 10% வீழ்ச்சி அடைந்துள்ளது.