புதுதில்லி:
வங்கிக்கணக்கில் இருந்து அதிகமுறை பணம் எடுத்தால் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நடைமுறைநீண்டகாலமாக இருக்கிறது.தற்போது, அதிகமான பணத்தைப் போடுவதற்கும் கட்ட
ணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுத்துறை வங்கி நிறுவனமான கனரா வங்கி-தான் இந்த நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.இந்த அறிவிப்பின் படி,ஜூலை 1-ஆம் தேதி முதல் கனரா வங்கியில் மாதத்திற்கு3 முறை மட்டுமே வங்கிக் கணக்கில் 50 ஆயிரம் ரூபாய் வரையில் இலவசமாக பணம் டெபாசிட் செய்ய முடியும். அதன்பிறகு டெபாசிட் செய்யும் ஒவ்வொரு 1000
ரூபாய்க்கும் 1 ரூபாய் சேவைகட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சேவைக் கட்டணமானது குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் 5000 ரூபாய்வரை இருக்கும் என்றும், அதனுடன் ஜி.எஸ்.டி வரியும் சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் கனரா வங்கி கூறியுள்ளது.மேலும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும், நேரடி பணப்பரிவர்த்தனையைக் குறைப்பதற்கும் மட்டுமே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தஅறிவிப்பு கனரா வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.