சென்னை,ஏப்.4- பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் மத்திய அரசு அறிவித்த மாதம் 500 ரூபாய் வீதம் மூன்று மாதங்க ளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
வங்கியில் தனிக்கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். குறிப்பிட்ட தேதியன்று அருகி லுள்ள வங்கி அல்லது வணிகத் தொடர்பு மையங்க ளில் இத்தொகையைப் பெறுவது பற்றிய தகவல் அதில் இடம்பெறும் என்று வங்கியின் நிர்வாக இயக்குனர் விக்ரமாதித்ய சிங் கிச்சி தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், தடையின்றி சரியான நேரத்தில் வாடிக்கையாளர்கள் பணம் பெறும் வகையில் போதுமான அளவுக்கு நிதி இருப்பு இருக்குமாறு வங்கிக் கிளைகள் மற்றும் வணிகத் தொடர்பாளர்களை அறிவுறுத்தியுள்ளோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.