சோற்று கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். லில்லியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.
இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரிஎனவும் அழைக்கப்படுகிறது. சித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.
கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியநாடுகளில் இயற்கையாக வளர்கின்றது.
இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் வளர்கின்றன. நுனியில் பெரும்பாலும் சிறு முட்கள் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை.அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.
எப்படி பயிரிடுவது…?
குர்குவா கற்றாழை(Aloe vera), கேப் கற்றாழை(Aloe ferox),சாகோட்ரின் கற்றாழை(Aloe perryi) ஆகிய இரகங்கள் உள்ளன.இந்தியாவில் குர்குவா கற்றாழை அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது.செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம்ஆகும்.மணல் தவிர்த்து எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையை சாகுபடி செய்யலாம். கார அமிலத்தன்மை 7 முதல் 8.5 வரைஉள்ள மண் வகைகளில் கற்றாழை நன்கு வளரும் தன்மை கொண்டது. நல்ல வடிகால் வசதியுடன் கூடிய நிலம் மிகவும் ஏற்றது.
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது ஏக்கருக்கு10 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து கொள்ள வேண்டும். பின்அதில் சிறிய பாத்திகளை அமைக்கவேண்டும். மலைப்பகுதிகளில் மலைச் சரிவுகளின் குறுக்காக சிறிய பார்களை அமைத்துகொள்ள வேண்டும்.
கற்றாழையை தனிப்பயிராக சாகுபடி செய்யும்போது எக்டருக்கு 10,000 பக்கக் கன்றுகள் தேவைப்படும்.தாய்ச்செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மாத வயதுடைய பக்கக் கன்றுகளைப் பிரித்து பயன்படுத்தவேண்டும். ஒரே அளவிலான பக்கக் கன்றுகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். இதனால் செடிகள் சீராக வளர்வதுடன் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும்.
பக்கக் கன்றுகளை பிரித்ததும் அவற்றின் வேரை கார்பன்டாசிம் கரைசலில் (லிட்டருக்கு 1 கிராம் கார்பன்டாசிம் மருந்து) ஐந்து நிமிடத்திற்கு நனைக்க வேண்டும். இவ்வாறு நனைத்த பிறகு நடுவதால் அழுகல் நோய் வராமல் பாதுகாக்கலாம். செடிகள் செழிப்பாக வளர்வதற்கு செடிக்குச் செடி மூன்று அடிஇடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். மலைச் சரிவுகளில்பாரின் அடிப்பகுதியில் பக்கக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.கற்றாழையை மானாவாரிப் பயிராக பயிர் செய்ய ஏற்றது. இறவையாக பயிரிடுவதாக இருந்தால் அதன் மொத்த பயிர் காலத்தில் ஐந்து முறை நீர்ப்பாசனம் செய்வது போதுமானது.
வளமான நிலங்களுக்கு தொழு உரம் இட்டால் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணிற்கு செடிகளை நட்ட20வது நாளில் ஏக்கருக்கு 30 கிலோ தழைச்சத்து கொடுக்கக் கூடிய உரத்தை அளிக்க வேண்டும். தழைச்சத்து 120 கிலோ உரத்தை அடியுரமாக இட வேண்டும். இதனால் அதிகளவு கூழ்மகசூல் கிடைக்கும்.செடிகள் நட்ட ஒரு மாதத்தில் முதல் களை எடுத்து சுற்றி மண்அணைக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் களை எடுக்கவேண்டும்.
கற்றாழை செடியில் அதிகமாக பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை. நீர் தேங்கும் நிலமாக இருந்தால் வேர் அழுகல் நோய் ஏற்படும். எனவே, நன்கு வடிகால் வசதி இருக்க வேண்டும்.நடவு நட்ட காலத்திலிருந்து 7- 8 மாதங்களில் மகசூல் எடுக்கலாம். இலையில் 80-90% நீர் உள்ளதால் விரைவாக வாடிவிடவாய்ப்புள்ளது. இதனால் அறுவடை செய்த உடனே இலைகளைப் பக்குவப்படுத்தி அவற்றில் இருந்து ஜெல்லைப் பிரித்தெடுக்க வேண்டும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்த ஆறுமணி நேரத்திற்குள் பக்குவப்படுத்த எடுத்துச் செல்ல வேண்டும்.ஒரு ஏக்கரில் இருந்து 15 டன் கற்றாழை இலை மகசூலாகக் கிடைக்கும்.
பயன்கள்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.கற்றாழையின் மடலில் உள்ள சாறை எடுத்து தேங்காய் எண்ணெய் கலந்து 40 நாட்கள் தலை முடியில் தேய்த்தால் கூந்தலின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராகவைத்துக் கொள்ளலாம்.
கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடித்தால் உடல் சூடுகுறையும். அலர்ஜி, கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண்சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டிஇரவு தூங்கினால் வலி குறையும். மூன்று தினங்களில் நோய்குணமாகும்.முகத்திலுள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள், உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும், சிறிது கற்றாழைச் சாற்றைத் தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். இதன் சாற்றை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து.காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவுபெறும்.