science

img

வேளாண் நிலம் : RNR-15048 சுகர் ப்ரீ நெல் ரகம்

கடந்த ஐந்து வருட காலமாக நெல் விவசாயிகளால் தென் இந்தியாவில் சற்று பிரபலமாக இந்த ரகம் சாகுபடி  செய்யப்பட்டு வருகிறது.
தெலுங்கானா மாநில நெல் ஆராய்ச்சி நிலையத்தால்கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்திலும் பரவலாக சில பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. ஜெய்சங்கர் என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் ஆயுட்காலம் சொர்ணவாரி பட்டத்தில் சுமார்125 நாட்களும், சம்பா பட்டத்தில் 140 நாட்களும் ஆகும்.ஆனால் தமிழகத்தில் சம்பா பட்டத்தில் மட்டுமே நன்குமகசூல் தருகிறது. கோடைகால பட்டத்தில் கதிர் சரியாகவெளி வருவதில்லை.இந்த ரக நெல் மணிகள் மிக சன்னமானவை. பாரம்பரிய முறையில் நாற்று விட ஏக்கருக்கு 20 கிலோ விதையே போதுமானது. இருபது நாள் வயது நாற்றுகளை நடுவது அதிக தூர்களுக்கு வழி வகுக்கும்.

இந்த ரகத்தை பாரம்பரிய முறைப்படி நடவு செய்வதை காட்டிலும் கயறு பிடித்து குத்திற்கு இரண்டு  நாற்றுகள் என்ற அளவில் சம்பா பட்டத்தில் நடவு செய்யும்போது மிக அதிக தூர்களுடன் ஏக்கருக்கு சுமார்45 மூட்டை வரை கிடைக்க வாய்ப்பு.ஒரு களை போதுமானது. வாய்ப்பு உள்ளவர்கள் கோனோவீடர் பயன்படுத்தலாம். நேரடி நெல்விதைப்பு மற்றும் புழுதி கால் விதைப்பிலும் இந்த ரகத்தை பயிரிடலாம்.

இயற்கை முறையில் சாகுபடி செய்யும் போது நல்ல மகசூல் கிடைக்கிறது. மண்ணில் ஓரளவு சத்துக்கள் குறைவாக இருந்தாலும் அதைத் தாங்கி மகசூல் அளிக்கிறது.
பூச்சி தாக்குதல் என்று பார்த்தால் சாதாரண சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் குருத்து பூச்சி தாக்குதல் இருக்கும். புகையான் தாக்குதல் இதற்கு இல்லை . கற்பூரகரைசல் இரண்டு முறை முன் கூட்டியே தெளித்து விட்டால் பூச்சி தாக்குதல் வர வாய்ப்பு மிக குறைவு.சற்று நீளமான கதிர்களை கொண்டுள்ளதால் பயிர் ஓரளவுக்கு சாயும் தன்மை உடையது. எனவே சம்பா வில் பத்து நாட்கள் கழித்து நடவு செய்வதன் மூலம் மழை மற்றும் வெள்ள சேதத்தால் பாதிக்க படுவதை தவிர்க்கலாம் .
இந்த ரகத்தின் அரிசியில் கார்போஹைட்ரேட் சத்துகுறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் பிரத்யேகமாக இந்த அரிசி சாதத்தை சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிடும் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக சொல்கின்றனர். 
(ஆதாரம்: கண்ணன், புதுக்கோட்டை 883805 8497)

கலப்பு உரம்  எப்படி தயாரிப்பது? 
தேவையான பொருட்கள்:

நாட்டு மாட்டு சாணம் - தேவையான அளவு
ஆட்டுப்புழுக்கை - தேவையான அளவு
எரு - தேவையான அளவு
இலை தலைகள் - தேவையான அளவு
 

தயாரிக்கும் முறை:
மாட்டுச் சாணம், இழை தலைகள், ஆட்டுப்புழுக்கை, எரு ஆகியவற்றை சம விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இதுவே கலப்பு உரம் ஆகும். இவற்றை கலந்தவுடன் வயல்களில் பயன்படுத்தலாம். இதில் சமையலறை கழிவுகள், குப்பைகள் என மக்கக்கூடிய அனைத்து கழிவுகளையும் பயன்படுத்தலாம்.
பயன்கள்:
கலப்பு உரம் இடுவதால் மண்ணிற்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கின்றன.இதில் அனைத்து இயற்கை இடுபொருட்களும் சம அளவில் இருப்பதால் பயிர்களுக்கு அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கின்றன.இதனால் பயிர்கள் நன்கு வளரும். பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவு.