tamilnadu

img

நாட்டுப்பற்று கொண்ட ஒவ்வொருவரும் எழுவீர்!

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களை மேலும் கூர்மைப்படுத்தும் விதமாக ஜனவரி 13 திங்களன்று தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில், இடதுசாரி தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா உள்பட 20 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

“பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த  நாங்கள், மோடி அரசாங்கத்தால் இந்தியப் பொருளாதா ரத்தை முற்றிலுமாக மிக மோசமானமுறையில் நிர்வகித்துவருவதன் காரணமாக, நம் நாட்டு மக்களில் பெரும்பான்மையோரின் வாழ்வாதாரங்கள் மிகவும் சீர்கேடு அடைந்திருப்பதற்கு எங்களின் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக் கொள்கிறோம். 

மந்த நிலையின்  விளிம்பில் பொருளாதாரம்

பொருளாதார நெருக்கடி, மந்தநிலையின் விளிம்புக்குச் சென்றுள்ளதன் விளைவாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி  அடைந்திருக்கிறது, வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக ரித்திருக்கிறது. விவசாய நெருக்கடி மேலும் ஆழமாகியி ருப்பதன் காரணமாக விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகரித்திருக்கிறது, தொழிற்பிரிவுகள் மூடப்பட்டுக் கொண் டிருக்கின்றன. இவற்றுடன் பெட்ரோலியப் பொருள்களும், சமையல் எரிவாயு, காய்கறிகள் மற்றும் அனைத்து அத்தியா வசியப் பொருள்கள் விலை உயர்வுகளும் மக்களின் வாழ்க்கையை மேலும் பரிதாபகரமான முறையில் வறிய நிலைக்குத் தள்ளியிருக்கிறது. மோடி அரசாங்கம், பொருளாதாரப் பேரழிவினை உருவாக்கி இருக்கிறது. இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நட வடிக்கைகள் எதையும் மேற்கொள்வதற்கோ அவற்றின் மூலம் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கோ பதிலாக, பாஜக அரசாங்கம் பதவியேற்றதற்குப் பின்பு, நாட்டில் மத வெறித் தீயை விசிறிவிடுவது, கோடிக்கணக்கான மக்கள் மற்றும் விளிம்புநிலை சமூகத்தினரைப் பாதிக்கக்கூடிய விதத்தில், ஜனநாயக உரிமைகள் மற்றும் மக்களுக்கு அரச மைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பது போன்று ஆபத்தான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.

துயரின் பிடியில் ஜம்மு - காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவு அவசரகதியில் ரத்து செய்யப்பட்டதுடன் அம்மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு, கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக மக்கள் கடுமையான முற்று கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். மக்களின் உரிமை கள் காலில் போட்டு மிதிக்கப்படுவதுடன், மக்களின் வாழ்வு பாழாகிவிட்டது. தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பது தொடர்கிறது. அதன் பொருளாதாரம் அழிந்துவிட்டது, மக்கள் சுதந்திரமாக இயங்குவது கட்டுப்படுத்தப்பட்டிருக்கி றது. ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர்கள் மூவர் உட்பட, நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், ஆயிரக்கணக்கான மக்களும் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்கிறது.

குடியுரிமை பறிக்கும் திரிசூலம்

இதன்பின்னர், பாஜக நாடாளுமன்றத்தில் தனக்கிருக் கும் பெரும்பான்மையைக் கொடுங்கோன்மையுடன் பயன் படுத்தி, எவ்விதமான அர்த்தமுள்ள விவாதமும் மேற் கொள்ளாமல், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறை வேற்றியுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு மூன்றும் அர சமைப்புச் சட்டத்திற்கு எதிரானவைகளாகும். மேலும் இவை ஏழை மக்களையும், அடித்தட்டு மக்களையும், தலித்/பழங் குடியினரையும் மொழிச் சிறுபான்மையினரையும், மதச் சிறுபான்மையினரையும் குறிவைத்துத் தாக்கக்கூடியது மாகும்.  தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற்கு அடிப்படையாகும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும், நாடு தழுவிய அளவில்  தேசியக் குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பணிகளை நிறுத்துங்கள்!

தேசியக் குடிமக்கள் பதிவேட்டை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று கூறியிருக்கிற அனைத்து முதலமைச்சர்களும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக் காக கணக்கெடுக்கும் பணியை சஸ்பெண்ட் செய்திட பரிசீலனை செய்திட வேண்டும். ஏனெனில் இது தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கான முன்னோடியாகும். குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகிய வற்றிற்கு எதிரான மக்கள் கிளர்ச்சிப் போராட்டங்கள் அனைத்து மதத்தினராலும் அமைதியான முறையில் நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காக நடைபெற்றுவரும் இக் கிளர்ச்சிப் போராட்டங்கள் அனைத்திற்கும் ஒருமைப் பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தக் கிளர்ச்சிப் போராட்டங்கள், பாஜக ஆளும் மாநிலங்களிலும், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தில்லியிலும் மிகவும் கொடூரமான அடக்குமுறை மூலமாக ஒடுக்கப்பட்டு வருகின்றன. 

பாஜக அரசுகளின் படுகொலைகள்

அமைதியாகக் கிளர்ச்சி செய்தவர்கள் கொல்லப்பட்டி ருப்பது அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்களில்தான் நடந்துள்ளன. அதாவது உத்தரப்பிரதேசத்தில் 21 பேர்,  அசாமில் 5 பேர், கர்நாடகாவில் 2 பேர் கொல்லப்பட்டிருக்கி றார்கள். இதேபோன்று நாடு முழுதும் பல்கலைக் கழ கங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர ஆராய்ச்சி அமைப்புகளில் போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறை நடவடிக்கைகளும் கடும் வார்த்தைகளால் கண்டிக்கப்பட வேண்டியவையாகும்.

தேசம் காக்க மூன்று தினங்கள்...

நம்முடைய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள், குழுக்கள், அறி ஞர்கள் வெளியிட்டுள்ள வேண்டுகோள்களை நாங்கள்  குறித்துக்கொண்டுள்ளோம். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இவ்வுணர்வினை மேலும் வலுப்படுத்தும் விதத்தில், நாட்டு மக்கள் அனைவரும் கீழ்க்காணும் தினங்க ளை அனுசரித்து ஒருமைப்பாட்டைத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்:

  • ஜனவரி 23-நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம். அவரது தலைமையின் கீழ், இந்திய தேசிய ராணு வத்தால் உருவாக்கப்பட்ட “ஜெய் ஹிந்த்” என்னும் முழக்கம் நாட்டு மக்களைப் பார்க்கும்போது வாழ்த்தும் முழக்கமாக மாறியிருக்கிறது. செங்கோட்டையில் நடைபெற்ற வர லாற்றுச்சிறப்புமிக்க இந்திய தேசிய ராணுவ விசாரணை யில், “சாகல், தில்லான், சஹனாவாஸ்” என்னும் முழக்கம் எதிரொலித்தது. இது மக்கள் மத்தியில் நம் நாட்டில் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்கிற தெளிவை அளித்து, மக்களிடையே 1945-46களின் சிரமமான காலத்தில் மக்களிடையே மத ஒற்றுமையை வலுப்படுத்தியது.
  • ஜனவரி 26 – குடியரசு தினம். அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை படித்து, நாடு முழுதும் அனைத்துப் பகுதிகளிலும் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட உறுதி ஏற்கும் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும்.
  • ஜனவரி 30-மகாத்மா காந்தி தியாக தினம். மத நல்லிணக்கத்தைப் பேண, அவர் மேற்கொண்ட விடாப்பிடி யான பிரச்சாரத்தை உயர்த்திப்பிடித்து இந்தத் தினத்தை அனுசரித்திட வேண்டும். இன்றைக்கு ஆட்சியாளர்கள் மேற்கொண்டுள்ள நட வடிக்கைகளுக்கு சரியான  பதிலடி கொடுக்கும் விதத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், நம் மதச்சார்பற்ற ஜன நாயகக் குடியரசையும் பாதுகாத்திட, மேற்கண்ட தினங் களை பொருத்தமான முறையிலும், வடிவத்திலும் அமைதி யான முறையில் அனுசரித்திட வேண்டும் என்று நாங்கள்கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மேற்கொள்வது நாட்டுப்பற்று கொண்ட ஒவ் வொருவரின் கடமையாகும் என்று நாங்கள் நம்புகிறோம்.