பாட்னா:
பீகார் மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததற்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பீகார் மாநில அமைச்சர் மங்கள் பாண்டே ஆகியோர்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று முசாபர்பூரைச் சேர்ந்த சமூகசேவகர் தமன்னா ஹாஸ்மி, சிஜிஎம் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை ஜூன் 24-ஆம் தேதி
நடைபெறுகிறது.