முதல்வர் தலையிட சிஐடியு வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 10- போக்குவரத்து தொழிலா ளர்களின் ஊதிய பேச்சு வார்த்தையை துவக்க தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தக் காலம் முடிந்து 6 மாதங்களாகி விட்டது. புதிய ஊதிய கோரிக்கைகள் போக்கு வரத்து நிர்வாகங்களுக்கும், அரசுக்கும் அனுப்பியும் இது நாள் வரை பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை. போக்கு வரத்து சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் பலமுறை வலி யுறுத்தப்பட்ட நிலையிலும் அரசு தரப்பில் பேசி சுமூக தீர்வு காண முன்வராதது பொறுத்த மற்ற செயலாகும்.
கடந்த ஊதிய ஒப்பந்தமும் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட தொடர்ச்சியான பல்வேறு போராட்டங்களின் நிர்ப்பந்தத் தின் காரணமாகவே ஏற்பட்டது என்பதை முதல்வரின் கவ னத்திற்கு கொண்டு வருகி றோம். பொதுமக்களின் பயண சேவையை பல்வேறு சிரமங்க ளுக்கு மத்தியிலும் உயிரை பண யம்வைத்து இரவு பகல் பாரா மல் கண்ணஞ்சாமல் விபத்து களின்றி பணிபுரிந்து வரும் அரசு போக்குவரத்து தொழிலாளர்க ளின் நியாயமான கோரிக்கை களுக்கு சிஐடியு ஆதரவு தெரி வித்துக்கொள்கிறது. ஊதிய பேச்சுவார்த்தை துவங்கும் வரை அரசு போக்கு வரத்து சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் மார்ச் 10 முதல் காத்திருப்பு போராட்டம் துவங்கி யுள்ளது. இப்பிரச்சனையில் தமி ழக முதல்வர் நேரடியாக தலை யிட்டு போராடும் தொழிற் சங்கங்களை அழைத்து பேச்சு வார்த்தையை துவக்குவ தற்கும், சமூக தீர்வு ஏற்படவும் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வலி யுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கை யில் தெரிவித்திருக்கிறார்கள்.