tamilnadu

img

இலங்கை தாதா அங்கொட லொக்கா சடலம்..போலிசார் தீவிர விசாரனை

கோவையில் உயிரிழந்த இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன்  அங்கொட லொக்காவின் உடல்  பிரேத பரிசோதனை செய்த பின்னர் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொடா லொக்கா கோவையில் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துள்ளார். போலி ஆவணங்கள் மூலம் தனது பெயரை பிரதீப் சிங் என மாற்றிக்கொண்டு உடற்பயிற்சி கூடங்களில் புரோட்டின் சப்ளை செய்யும் விற்பனையாளராக இருப்பதாகக் கூறி கொண்டு தலைமறைவு வாழ்க்கை நடத்தியுள்ளார்.  கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி கோவை காளப்பட்டி மஹாராஜா நகர் பகுதியில் தலைமறைவாக இருந்த வீட்டில் அங்கொடா  லொக்காவிற்கு  மாரடைப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிந்தார்.

இச்சூழலில் மதுரையில் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மூலம்  உடலை மதுரைக்குக் கொண்டு சென்று எரித்தனர். இந்நிலையில் அங்கொடா லொக்காவின் காதலி அம்மானி தான்ஞி, வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, அவரது நண்பர் தியானேஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  அங்கொட லொக்கா இறந்ததாகச் சொல்லப்பட்டாலும் இலங்கை காவல் துறையினர் இன்னும் அதை ஏற்கவில்லை. இறந்தது அங்கொடா லொக்காதான் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி போலீசாருக்கு  ஏற்பட்டுள்ளது. அவரின் உடலை எரித்துவிட்ட நிலையில்  இதற்கான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அங்கொட லொக்காவின் காதலி அம்மானி தான்ஜியிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரது செல்போனில் இருந்து அங்கொட லொக்கா இறந்தபோது எடுத்த புகைப்படங்கள், பிரேதப் பரிசோதனை செய்த பின்னர் எடுத்த புகைபடங்கள், வீடியோ காட்சிகள் ஆகியவற்றை சிபிசிஐடி கைபற்றியுள்ளனர்.