tamilnadu

img

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்தா? அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற வைகோவின் கோரிக்கைக்கு முதல்வர் தான் முடிவெடுப்பார் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக செயல்படும் வரும் தினசரி காய்கறி சந்தையில் நகராட்சியுடன் இணைந்து அமைந்திருந்த ரோட்டரி சங்கத்தினர் கிருமி நாசினி தெளிக்கும் சரங்க நடைபாதையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், 

கோபியிலிருந்து பரிசோதனைக்கான அழைத்துச் சென்ற மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கோபிப்பகுதியில் 11.771 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பொருட்கள்  வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினசரி காய்கறி சந்தை மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இரு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்க வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என வைகோவின் கோரிக்கைக்கு முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பதிலளித்தார்.

அதனை தொடர்ந்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஈரோடு மாவட்டத்தில் 28 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 15 நபர்களுக்கான பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. 50 நபர்களுக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனிநபர் கொரோனா தொற்று இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை. தனிமைப்படுத்தப்பட்டோர்களின் கைகளில் வைக்கப்படும் முத்திரையினால் எந்தவித தோல் தொற்றும் ஏற்படாது  என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.  (படம் உள்ளது)