மத்திய அரசுக்கு மேற்கு மண்டல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்
ஈரோடு, ஜூன் 15- தமிழக மேற்கு மண்டல தொழில் களை பாதுகாக்க ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான பேக்கேஜ்ஜை மத்திய அரசு அறிவித்திட வேண்டுமென மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தின் மேற்கு மண்டல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்களன்று ஈரோட்டிலுள்ள மதிமுக மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்தீபன், கரூர் நாடாளுமன்ற உறுப்பி னர் எஸ்.ஜோதிமணி, நாமக்கல் நாடா ளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்னராஜ், திண்டுக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் பி.வேலுச்சாமி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழக மேற்கு மண்டலத்தின் பிரதான தொழிலாக இருந்து வரும் சிறு, குறு தொழில்கள், திருப்பூர் பனியன் மற்றும் பின்னலாடை, இன்ஜீனியரிங், பஞ்சாலை, கைத்தறி, விசைத்தறி, விவ சாய கூலி தொழில், கரூர் கொசுவலை, பெட்சீட், ஜமக்காளம், நாமக்கல் கோழிப்பண்ணை, திண்டுக்கல் தோல் தொழிற்சாலை ஆகியவை கடுமை யான நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஆகவே, இத்தொழில்களை புனர மைக்கும் வகையில் தொழில் நிறு வனங்களுக்கு 30 சதவிகித மானியத்து டன் கூடிய 1 லட்சம் கோடி ரூபாய்க்கான பேக்கேஜ்ஜை மத்திய அரசு உடனடியாக அறிவித்திட வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியை நிறுத்தியதை ஏற்க முடியாது; சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்; கொரோனா ஊரடங்கு காலத்திலும் எதிர் கட்சியினர், ஊடக வியலாளர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யும் அரசின் நடவடிக்கை களை கண்டிக்கிறோம்; மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசு களின் உரிமைகளை பறித்து வருவது சரியல்ல;
உயர் மின் அழுத்த கோபுரங்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விளை நிலங்கள் கொண்ட விவசாயி களுக்கு கோவை மாவட்டத்தில் தற்போது இழப்பீட்டு நிவாரணம் வழங் கப்பட கணக்கீட்டு முறை உருவாக்கப் பட்டுள்ளது. இதர மாவட்டங்களிலும் அந்த இழப்பீட்டு கணக்கீட்டு முறையை பயன்படுத்தி நிவாரணம் கணக்கிட்டு வழங்கிட வேண்டும். தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் அரசின் திட்ட விளக்கங்கள், அவை பற்றிய ஆய்வு கூட்டங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் குறித்து இம்மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்புகள் அல்லது தகவல்கள் எதையும் மாவட்ட ஆட்சியாளர்கள் கொடுப்பதில்லை. இதை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் திட்டப்பணிகளில் குறைகள் இருப்பதை, சரி செய்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு சுட்டிக் காட்டிய நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களை தகாத முறை யில் நடத்திய தோடு, தாக்கவும் முயற்சித்து அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரை வன்மையாக கண்டிக்கிறோம்.
தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற, பாஜக மாநில நிர்வாகி களில் ஒருவர் கரூர் எம்.பி., ஜோதி மணி அவர்கள் பேசும் போது அடிக்கடி குறுக்கீடு செய்ததுடன், அவரை ஒருமை யில் விழித்தும், தகாத வார்த்தைகளை பேசியும், அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம் . இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.