tamilnadu

img

வெங்காயம் விலை பல மடங்கு உயர்வு

சென்னை, டிச. 4- விளைச்சல் குறைந்து, சந்தைகளுக்கு வரத்தும் குறைந்து  விட்டதால் வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயத் தின் விலை கிலோ ரூபாய் 140 முதல் 180 வரையிலும், சின்ன  வெங்காயம் கிலோ ரூபாய் 180 முதல் 200 வரையிலும் விற்ப னையாகிறது.  கடந்த வருடம் விலை வீழ்ச்சியடைந்து 10 ரூபாய்க்கு விற்ப னையானதால் நட்டம் ஏற்பட்டு, மகசூலைக் குறைத்துக் கொண்  டதுடன், இந்த ஆண்டு பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள தால் வரத்து குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  கோயம்பேடு சந்தைக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்  களிலிருந்து நாள் ஒன்றுக்குப் பெரிய வெங்காயம் 30 லாரிகள்  வந்த நிலையில் தற்போது 10 லாரிகள் கூட வராததால் விலை  அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி காந்தி சந்தைக்கு மகாராஷ்டிரா, கர்நாடகா மாநி லங்களிலிருந்து நாளொன்றுக்கு 40 முதல் 50 லாரிகளில் வெங்காய வரத்து இருந்த நிலையில், அங்குப் பெய்த கடும்  மழை காரணமாக நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வரத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. திருச்சி துறையூர், அகரம் பகுதிகளில் விளையும் வெங்கா யம் உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவில்  இல்லாததால், பெரிய வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் ரகம் வாரியாக, கிலோ 100 லிருந்து 150 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலை தெரிவித்ததுடன், வெங்காயத்தின் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வு பொங்கல் வரைக்கும் நீடிக்கும் என்றும், அறுவடைக்கு பிறகே விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூபாய் 140 க்கும் பெரிய வெங்காயம் கிலோ ரூபாய் 80 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை  அதிகம் என்பதால் வெங்காயம் வாங்குவதைக் குறைத்துக் கொண்டதாக இல்லத்தரசிகள் தெரிவித்தனர். சின்ன வெங் காயத்தைக் கிலோ ரூ.140க்கு வாங்கி அதே விலைக்கு விற்றாலும் வாங்க ஆளில்லை என்றும் வியாபாரிகள் கவலை  தெரிவித்தனர்.