tamilnadu

img

மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவருக்கு மறைமுக தேர்தல்

அதிமுக அரசு ‘அவசர’ சட்டம்

சென்னை,நவ.20- தமிழ்நாட்டில் மேயர் பத­விக்கும் நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிக்கும் மறைமுக தேர்தல் நடத்து வதற்கு வழிவகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித் துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடி வடைந்தும் கடந்த மூன்று ஆண்டு காலமாக தேர்தலை நடத்தாமல் ஆளும்  அதிமுக அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது. இதனால், உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் முடங்கி விட்டன. நிதி ஒதுக்கீடும் இல்லாமல் திண்டாடி வருகின்றன. எனவே, உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி பிரநிதிகளை தேர்வு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்திலும், உச்ச  நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்கு கள் தொடரப்பட்டன.  இந்த வழக்கின் விசாரணையின்போது ஆட்சி யாளர்களின் நடவடிக்கைக்கு நீதிபதி கள் பலமுறை கண்டனம் தெரி வித்தனர்.

தேர்தல் நடக்குமா?

இந்நிலையில், அடுத்த மாதம் தேர்தல் நடத்துவதற்கான அட்ட வணையை கட்டாயம் அறிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  மாநில தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளை செய்து வருகிறது. ஆனாலும், மாவட்டங் கள் பிரிப்பு,  புதிய வட்டங்கள்  அறிவிப்பு என செய்து வரும் எடப்பாடி அரசின் நடவடிக்கைகள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? என்று மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகளிடமும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புளுகுமூட்டைகள்

இதற்கிடையே, நவம்பர் 19 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மேயர் பதவி மற்றும் நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்க முடிவு செய்திருப்பதாகவும் இதற்காக அவசரச் சட்டம் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டகேள்விக்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,“ மறைமுக தேர்வு குறித்து  எந்த முடிவும் எடுக்கவில்லை. மாற்றம் வந்தால் நிச்சயம் தெரிவிப்போம்” என்று கூறியிருந்தார்.

ஆனால், நவம்பர் 20 அன்று மாலை தமிழக அரசு  பிறப்பித்த அவசரச் சட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன் சிலர்கள் மூலம் மேயர் தேர்ந்தெடுக்கப்  படுவார். நகராட்சி மற்றும்  பேரூ ராட்சி தலைவர் பதவிகளும் கவுன்சிலர்கள் மூலம் மறைமுகமாக தேர்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வை கட்டாயம் கொண்டு வரமாட்டோம் என்று கடைசி நிமிடம் வரைக்கும் மாணவர்களையும் பெற் றோரையும் ஏமாற்றியதுபோல் மேயர் மற்றும் நகராட்சித் தலைவர் தேர்விலும் அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஆளும் அதிமுக அரசு வஞ்சித்துவிட்டது.  அதுபோல் தற்போது தமிழக அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதால் ஆட்சியாளர்கள் மறைத்து வைத்திருந்த பூனைக் குட்டி வெளியில் வந்துவிட்டது.  அரசின் இந்த முடிவு மிகப்பெரிய ஜனநாயக படுகொலை என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.